Gallery
Gallery

தேடல்

Webozeeya.com
முதல் பக்கம் விமர்சனம் ஒஸ்தி திரைவிமர்சனம்
ஒஸ்தி திரைவிமர்சனம்
வெள்ளிக்கிழமை, 09 டிசம்பர் 2011 19:04

இந்தி "தபாங்க்" தமிழுக்கு ஏற்றவாறு தரணியின் கைவண்ணத்தில் டச்-அப் செய்யப்பட்டிருகிறது.

கை சுத்தமாக இல்லாவிட்டாலும் மனம் சுத்தமாக இருக்கும் இன்ஸ்பெக்டர் ஒஸ்திவேலன் தனது வேலையில் கெட்டிக்காரர். தேர்தலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதற்காக தனது சரகத்தினுள் நுழையும் இருபத்தைந்து லட்சம் பணத்தை மடக்கிப் பிடிக்கிறார். கைப்பற்றிய பணத்தை காவலர்களிடம் பகிர்ந்துகொண்டு மிச்சத்தை வீட்டில் மறைத்துவைக்கிறார்.

osthi review

பணத்தைப் பறிகொடுத்த அரசியல்வாதி பாக்ஸர் டேனியல் அந்தப் பணத்தை திருப்பி வாங்கவும் பழிவாங்கவும் தேர்தலில் ஜெயிக்கவும் ஒரே நேரத்தில் முயற்சிக்கிறார். பாக்ஸரை ஒஸ்திவேலன் எப்படி சமாளித்து அவரை தோல்வியடையச் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் டைட்டில் காட்சி போட்டதுமே ராக்கெட் வேகத்தில் சீறிப்பாய்ந்து தொடங்குகிறது ஒஸ்தி. குறும்பான காதல், அழுத்தமான பாச உறவுகள் இரண்டிற்குமே அதற்குரிய இடம் கொடுக்கப்பட்டிருந்தாலும் படம் முடியும்வரைக்கும் வேகத்தில் விறுவிறுப்பு மட்டுமே.

ஒஸ்திவேலனாக நடித்திருக்கும் சிலம்பரசனுக்கு இது போலீஸ் வேடத்தில் நடிக்கும் முதல் படம். அடுத்தடுத்த படங்களையும் விரைவில் எதிர்பார்க்கலாம். அந்தளவுக்கு போலீஸ் அதிகாரி வேடத்திற்குப் பொருத்தமாகவே இருக்கிறார்.

மயக்கம் என்ன படத்தில் நடிப்பால் அசத்திய ரிச்சா இந்தப் படத்தில் அழகால் சொக்கவைத்திருக்கிறார்.

ஒஸ்திவேலனின் அம்மாவாக நடித்திருக்கும் ரேவதி மகனுக்கும் கணவனுக்கும் நடக்கும் மனப்போராட்டத்திற்கு இடையில் சிக்கித் தவிக்கும் வேதனையை படம் பார்ப்பவருக்கும் பகிர்ந்து கொடுத்துவிடுகிறார். அப்பாவாக விஜயகுமாரும் அப்பாவித் தம்பியாக ஜித்தன் ரமேஷூம்.

பாக்சர் டேனியலாக சோனு சூத். உண்மையாகவே மிரட்டியிருக்கிறார்.

தம்பி ராமய்யா, மயில்சாமி, வையாபுரி என்று ஏகப்பட்ட பேர் இருந்தாலும் காமெடிக்கு சந்தானம் பேசும் வசனங்கள்தான் பலம்.

நெல்லையில் களத்தை அமைத்திருக்கும் இயக்குநர் தரணி அதை வசனத்திலும் தவறாமல் நினைவூட்டியே இருக்கிறார். மற்றபடி நெல்லைத்தமிழில் பேசும் போலீஸ் கமிஷனர், கலெக்டரை நக்கலடிக்கும் இன்ஸ்பெக்டர் என்று எந்த இடத்திலும் லாஜிக் மட்டும் பார்க்கவே கூடாது. அதற்கு நீங்கள் தயார் என்றால் இரண்டு மணி நேர கொண்டாட்டத்திற்கு தயார் ஆகுங்கள்...

ஸ்கோர் போர்ட்
டக் அவுட் சிங்கிள் டூஸ் ஃபோர் சிக்ஸ்

 

திரைக்குப் பின்னால் : ஒஸ்தி

படப்பிடிப்பை பெங்களூருவைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே ஷெட்யூலில் நடத்தி முடித்திருக்கிறார் தரணி.

படத்தின் இறுதிக்காட்சியில் சிலம்பரசன் "சிக்ஸ் பேக்" காட்டி சண்டையிடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இயக்குநரோ, நடிகரோ அப்படியொரு காட்சியை எடுப்பதாக திட்டமிடவே இல்லை. ஆனால் சிலம்பரசன் சிக்ஸ் பேக்கில் நடிப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பிற்கு இடையே கடுமையான உடற்பயிற்சி செய்து அந்தக் காட்சியில் நடித்திருக்கிறார் சிலம்பரசன்.


Social Bookmarking websites
Reddit! Del.icio.us! Mixx! Free and Open Source Software News Google! Live! Facebook! StumbleUpon! Yahoo! Free Joomla PHP extensions, software, information and tutorials.

Add this to your website
Comments (0)Add Comment

Write comment

busy
 

Top Box Office