| போராளி திரைவிமர்சனம் |
| சனிக்கிழமை, 03 டிசம்பர் 2011 12:38 | ||||||||||||
|
கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் இளங்குமரனும் நல்லவனும் நண்பன் புலிக்குட்டியை தேடிவந்து அவனோடு ஒட்டிக்கொள்கிறார்கள். பெட்ரோல் பங்கில் வேலைபார்த்துக்கொண்டே அவர்கள் சுயதொழில் ஒன்றையும் நடத்தி வெற்றி பெறுகிறார்கள்.
எந்தப் பெண்ணை பார்த்தாலும் வலைவீசிப் பார்க்கும் நல்லவன், நெருங்கிவரும் பெண்ணை விரட்டியடிக்கும் இளங்குமரன் இருவருமே ஒருகட்டத்தில் காதலில் வீழ்கிறார்கள். இதற்கிடையில் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்யச் சொல்லி தொல்லை கொடுத்துவந்த உரிமையாளர் ஒருகட்டத்தில் தனது மகளையே இளங்குமரனுக்குக் கட்டிக்கொடுக்கச் சம்மதிக்கிறார். ஆனால் திடுதிப்பென்று வீட்டிற்குள் நுழையும் ஒரு கூட்டம் அவருக்கு இளங்குமரனைப்பற்றிய அதிர்ச்சியான ஒரு செய்தியைச் சொல்கிறது. அச்செய்தி என்ன, அது உண்மைதானா என்பதுதான் படத்தின் கதை. இளங்குமரனாக சசிகுமாரும், நல்லவனாக நரேஷூம். பாதுகாப்பு உணர்வின்றி தவிக்கும் பாரதி(ஸ்வாதி) அதன் காரணமாகவே எதற்கெடுத்தாலும் வீண் கற்பனைகளை வளர்த்துக்கொள்கிறார். இன்னொருபக்கம் அதே பிரச்சனையின் காரணமாக தமிழ்ச்செல்வியோ(வசுந்தரா) மிரட்டலை தனது ஆயுதமாக வைத்திருக்கிறார். இரண்டு இளம்பெண்களின் மன உணர்வுகளையும் சிறப்பாகவே பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர். சென்னை புறநகரில் உள்ள ஒரு குடியிருப்பின் சகல அம்சங்களையும் மணிபோல பொறுக்கிப் பொறுக்கிக் கோர்த்திருக்கும் இயக்குநர் இடைவேளைக்குப் பிறகு ப்ளாஷ்பேக்கை மட்டுமே நம்பியிருப்பது ஆச்சர்யம். விளைவு படத்தின் பின்பாதி சராசரி படங்களின் வழக்கமான பாதையிலேயே பயணிக்க ஆரம்பித்துவிடுகிறது. புலிக்குட்டி வேடத்தில் கஞ்சா கருப்பு நடித்திருக்கிறார் என்றாலும் படத்தின் முதல்பாதியில் அனைத்துப் பாத்திரங்களுமே நகைச்சுவையில் மின்னுகிறார்கள். இசை “நாடோடிக”ளின் தொடர்ச்சி. சசிகுமார்- சமுத்திரக்கனி கூட்டணியில் எதிர்பார்ப்பை உண்டாக்கி அதை நிறைவேற்றியும் இருக்கும் படம்.
In English Ilankumaran and Nallavan come to Chennai from their native village. They find their friend Pulikutty and stay with him. They work in a petrol bunk and start a side business. The friends are successful at their jobs and business. More...
Set as favorite
Email this
Comments (0)
![]() Write comment
|
||||||||||||













