| கத்தார் வேடத்தில் திலகன் |
| செவ்வாய்க்கிழமை, 01 பெப்ரவரி 2011 16:49 |
|
***மீனாவின் பெண்குழந்தைக்கு "நைனிகா" என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஜாதகத்தின் அடிப்படையில் வைத்த பெயராம். அம்மாவைப்போல பொண்ணுக்கும் அழகான கண்களாம். இன்னும் இருபது வருஷத்தில் அடுத்த ஹீரோயின் ரெடி. *** வாலியை அடுத்து வைரமுத்துவும் தனது ஆயிரம் பாடல்கள் கொண்ட தொகுதியை வெளியிட்டு தன்னையும் சீனியர் லிஸ்ட்டில் உறுதிசெய்துவிட்டார். இப்போது பா.விஜயை அடுத்து அவரைப்போலவே கவிஞர் விவேகாவும் தான் எழுதிய கவிதைப் புத்தகங்களை ஒரே நாளில் வெளியிடப் போகிறார். முத்துக்குமார் என்ன செய்யப்போகிறார்? ஆயிரம் பாடல் தொகுதியா? இல்லை, ஐந்தாறு கவிதைப் புத்தகமா? *** பாடலாசிரியர் வைரமுத்து தொடக்கக் காலத்திலிருந்தே அவ்வப்போது சில படங்களுக்கு வசனம் எழுதி வந்தாலும் சமீப காலமாய் எந்தப் படத்திற்கும் உரையாடல் எழுதவில்லை. "தனக்கு போட்டியாக வந்துவிட்டாரே" என்று கலைஞர் கருதிவிடுவாரோ என்று பயந்திருக்கலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளப் படமொன்றின் மொழிமாற்றப் படத்திற்காக தனது பேனா மூடியைக் கழற்றியிருக்கிறார் கவிஞர். கமல் இயக்கிய "மஞ்சில்போல் ஒரு பெண்குட்டி" என்ற இப்படத்தில் பானுப்ரியா நடித்திருக்கிறார். *** இயக்குநராக அறிமுகமாகி கதாநாயகனாக கலக்கிக்கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவரின் அடுத்த அவதாரம் இசையமைப்பாளர். "இசை" என்ற பெயரில் தயாராகும் அவரது அடுத்தப் படத்தில் இயக்கம், இசையமைப்பு இரண்டுமே அவர்தான். சிம்புவின் நண்பர் அவரைப்போலவே பாடவும் செய்வாரா? *** பொங்கலில் முந்திரிப்பருப்பை தூவுவதுபோலத்தான் திரைப்படப் பாடல்களில் திருக்குறளை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி" படத்திற்காக காமத்துப்பாலில் வரும் 14 திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்து அதையே பாடலாகவும் மாற்றி இருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர். *** மன்சூர் அலிகான் தனது மகனின் பெயரில் "துக்ளக் சினிமாஸ்" என்ற படக்கம்பெனியை ஆரம்பித்திருக்கிறார். "கடன்வாங்கி கல்யாணம்" என்ற பெயரில் அவர் எடுக்கப் போகும் நகைச்சுவை படத்தில் நடிக்க சிம்ரனைக் கேட்டிருக்கிறார். அவர் மறுத்துவிட வேறு கதாநாயகிகளையும் அணுகியிருக்கிறார். எல்லோரிடமிருந்தும் ஒரே பதில்தான் வந்ததாம். "ம்கூம்..."
**** "யுத்தம் செய்" நாயகி திபாஷா'வுக்கு எட்டு மொழிகள் தெரியுமாம். அடுத்து இப்போது தமிழையும் கற்றுக்கொண்டிருக்கிறார். |
*** ஆந்திரத்தில் உள்ள புரட்சிகரக் குழுக்களின் புகழ்பெற்ற தலைவர் கத்தார். அவரைப்போன்ற ஒரு புரட்சிப் பாடகர் வேடத்தில் நடிக்கிறார் திலகன். "காதல் வேதம்" என்ற பெயரில் தயாராகும் இந்தப்படத்தை இயக்கியிருப்பது வினயன்.









