Gallery
Gallery

தேடல்

Webozeeya.com
முதல் பக்கம் பாப்கார்ன் கமலஹாசனின் கவிதைமுகம்
கமலஹாசனின் கவிதைமுகம்
புதன்கிழமை, 03 நவம்பர் 2010 16:56

*அமீர் இயக்கிவரும் “ஆதிபகவன்” படத்தில் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையான கேரக்டரில் நடிக்கிறாராம் நீது சந்திரா. நீதுவோ இதுவரை சிகரெட்டை தொட்டுப்பார்த்ததுகட இல்லையாம். கதைப்படி கட்டாயமாக அவர் சிகரெட் பிடித்தே ஆகவேண்டும் என்ற அமீர் வற்புறுத்த தவிர்க்க முடியாமல் ஒத்துக்கொண்டிருக்கிறார் நீது.

அவர் சிகரெட் பிடிக்கும் காட்சியை எடுப்பதற்காக எக்கச்சக்கமாய் ரீடேக் சொல்லியிருக்கிறார் அமீர். கடைசியில் காட்சி ஓ.கே. ஆனபோது நீது பிடித்த சிகரெட்டுகளின் எண்ணிக்கை 28 ஆகிவிட்டதாம். பாவம் நீது…

* தமிழில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்குப்பக்கம் நகர்ந்தார் காம்னா. அங்கேயும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக எந்த படங்களும் கிடைக்கவில்லை. கவர்ச்சியின் எல்லைக்கேப் போனபிறகும் இதுதான் நிலையா என்ற வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் காம்னா தற்போது “காசேதான் கடவுளடா” என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படமும் தோல்வியென்றால் சினிமாவுக்கே முழுக்குப் போட்டுவிடும் திட்டத்தில் இருக்கிறாராம்.

* ஜீவா இரட்டை வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கம் படம் “சிங்கம்புலி”. இதில் வக்கீல், மீன் வியாபாரி என்ற இரண்டு கேரக்டர்கள் ஜீவாவுக்கு. மீன் வியாபாரியான ஜீவாவுக்கு திவ்யா ஜோடியாக நடிக்கிறார். ராயபுரம் மீன் மார்க்கெட்டில் திவ்யா சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு சீன் முடித்ததும் கேரவனை நோக்கி ஓடியிருக்கிறார் திவ்யா. அடிக்கடி அவர் வாந்தியெடுக்கப்போவது போல முகபாவனை காட்ட யூனிட்டில் சலசலப்பு. மீன் வாடையைப் பொறுக்க முடியவில்லை என்ற உண்மையான காரணத்தைச் சொல்லி கண் கலங்கினாராம் திவ்யா.

* கமலஹாசன் நடித்துவரும் "மன்மதன் அம்பு" படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இதில் நான்கு பாடல்களை கமலஹாசனே எழுதியிருக்கிறார். படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலை விவேகா எழுதியிருக்கிறார். விருமாண்டி படத்தில் முத்துலிங்கம், இளையராஜா என்று ஏற்கெனவே பிரபலமான பாடலாசிரியர்களுடன் கமலஹாசனும் பாடல் எழுதியிருந்தார். இப்போதோ வளர்ந்துவரும் அடுத்த தலைமுறை கவிஞர்களுடன் பாடல் எழுதியிருக்கிறார்.

* "தென்மேற்குப் பருவக்காற்று" படத்தின் விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று திரைக்கு வருவதற்கு முன்னாலேயே தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார். அவர் இயக்கப்போகும் அடுத்தப் படத்தின் பெயர், "நீர்ப்பறவை".

* “மகிழ்ச்சி” படம் எப்படியும் வெற்றி பெற்று திரையுலகில் தனக்கு ஒரு நிலையான பெயரைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் கௌதமன். அடுத்து இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் கவனம் செலுத்தப் போகிறாராம். அவரது அடுத்தப்படத்திற்கு சரண்யா பொன்வண்ணனை அம்மாவாக நடிக்கக் கேட்டிருக்கிறார்.

* திரைப்படங்களில் திரைக்கதை வசனம் எழுதத்தான் பொதுவாக எழுத்தாளர்கள் விருப்பப்படுவார்கள். ஆனால், சாரு நிவேதிதா தனது நண்பரான இயக்குநர் மிஷ்கினிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு குத்தாட்டம் போட்டிருக்கிறார். இலக்கிய விழாக்கள். இணைய தளம் என்று எந்த வாய்ப்பு கிடைத்தாலும் இதைப்பற்றி பேசிவிட்டித்தான் அடுத்த விஷயத்திற்கே வருகிறாராம் சாரு. இத்தனைக்கும் அந்தக்காட்சி படத்தில் வெறும் முப்பது வினாடிகள் மட்டும்தான் இடம்பெறப் போகிறதாம்.

 



Social Bookmarking websites
Reddit! Del.icio.us! Mixx! Free and Open Source Software News Google! Live! Facebook! StumbleUpon! Yahoo! Free Joomla PHP extensions, software, information and tutorials.

Add this to your website
 

Top Box Office