Gallery
Gallery

திரைப்பட முன்னோட்டம்



தேடல்

Webozeeya.com
முதல் பக்கம் முன்காட்சி சமரன்- முன்னோட்டம்
சமரன்- முன்னோட்டம்
வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2011 19:30

"ஒஸ்தி" வெற்றிப்படத்தைத் தொடர்ந்து பாலாஜி ரியல் மீடியா பிரைவேட் லிட். நிறுவனம் "தீராத விளையாட்டுப்பிள்ளை" படத்தினை இயக்கிய திரு இயக்கத்தில் ஒரு புதிய படத்தினை மிகப்பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு "சமரன்" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

"சமரன்" என்பதற்கு போர்வீரன் என்று பொருள். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க முதன்முறையாக அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ப்ரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

ஒரு சராசரி மனிதனின் நடைமுறை வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் நடக்கின்றன. அதனால் அவனுக்கு ஏற்படும் விளைவுகளை, அவற்றை அவன் எதிர்கொள்ளும் முறைகளை சுவாரஸ்மான சம்பவங்களின் கோர்வையாக்கி அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும்வண்ணம் ஆக்ஷன்-த்ரில்லராக இப்படம் உருவாகிறது.

இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சாலக்குடியில் 5 நாட்கள் மிகப்பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளுடன் நடைபெற்றது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் 20ம் தேதி முதல் தாய்லாந்தில் 50 நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஆக்ஷன் நிறைந்த சமரனின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஐரோப்பாவின் புகழ்மிக்க இடங்களில் நடத்தவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஆக்ஷனும் த்ரில்லரும் கலந்த சமரன் வரும் 2012ம் ஆண்டு கோடையில் வெளிவர இருக்கிறது.

யுவன்ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். "கோ", "அங்காடித்தெரு" படங்களின் ஒளிப்பதிவாளரான ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ராமகிஷ்ணன் வசனம் எழுதுகிறார்.

பாடல்கள் : நா.முத்துக்குமார்

எடிட்டிங் : ரூபன் ஆண்டனி

மக்கள் தொடர்பு : நிகில்

தயாரிப்பு மேற்பார்வை : பி.என்.சுவாமிநாதன்

தயாரிப்பு : பாலாஜி ரியல் மீடியா பிரைவேட் லிட்.

கதை, திரைக்கதை, இயக்கம் : திரு



Social Bookmarking websites
Reddit! Del.icio.us! Mixx! Free and Open Source Software News Google! Live! Facebook! StumbleUpon! Yahoo! Free Joomla PHP extensions, software, information and tutorials.

Add this to your website
Comments (0)Add Comment

Write comment

busy
 

Top Box Office