Gallery
Gallery

தேடல்

Webozeeya.com
முதல் பக்கம் நியூஸ் நண்பன் பாடல் வெளியீடு
நண்பன் பாடல் வெளியீடு
வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011 15:24

nanban audio launch

விஜய் நடித்த படங்களின் பாடல் வெளியீட்டு விழாக்கள் சென்னைக்கு வெளியிலேயே நடக்க ஆரம்பித்திருக்கின்றன. மதுரையை அடுத்து இப்போது கோவையில். ஆனால் இந்தத் தடவை விஜய் படம் என்பதைத்தாண்டி ஷங்கர் இயக்கிய படம் என்ற முத்திரையோடு.

கோவையில் நடைபெறும் நண்பன் பாடல் வெளியீட்டு விழாவிற்கு இன்னொரு காரணமும் உண்டு. சில மாதங்களுக்கு முன்பு ஹாரிஸ் ஜெயராஜ் கோவையில் நடத்த இருந்த "எட்ஜ் ஆன் ஹாரிஸ்" இசைநிகழ்ச்சி பருவநிலை காரணமாக நிறுத்தப்பட்டது. ஹாரிஸின் இசைரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்யாமல் "நண்பன்" விழாவோடு சேர்த்து இசைநிகழ்ச்சியையும் நடத்திவிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

வரும் 23ம் தேதியன்று மாலை ஐந்து மணிக்கு கோவை ஹெ.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நண்பன் பாடல் வெளியீட்டு விழாவையடுத்து "ஹாரிஸ் ஆன் எட்ஜ்" இசைநிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

சென்னையில் இருக்கும் ரசிகர்கள் இந்நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட வேண்டாம். விரைவில் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் இந்நிகழ்சியை கண்டுகளிக்கலாம்...



Social Bookmarking websites
Reddit! Del.icio.us! Mixx! Free and Open Source Software News Google! Live! Facebook! StumbleUpon! Yahoo! Free Joomla PHP extensions, software, information and tutorials.

Add this to your website
Comments (0)Add Comment

Write comment

busy
 

Top Box Office