|
சீனு ராமசாமியின் "காற்றால் நடந்தேன்" |
|
சனிக்கிழமை, 03 டிசம்பர் 2011 14:20 |
|
தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் இயக்குநர் சீனு ராமசாமியின் "காற்றால் நடந்தேன்" கவிதைநூல் வெளியீட்டு விழா நேற்று மாலை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விவேக், எஸ்.ராமகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
பாண்டிச்சேரியிலிருந்து நிதானமாகவே விழாவுக்கு வந்திருப்பதாக தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு பேச்சை ஆரம்பித்தார் விவேக். "ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரைக்கும் நான் படிக்கிறேன். ஆனால் அதையெல்லாம் வெளியே காட்டிக்கொள்வதில்லை. கோமாளியாக சிரிப்புமூட்டியாக இருக்கும் எங்களுக்குப் பின்னால் இசை இருக்கிறது, இலக்கியம் இருக்கிறது. எனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் நடிகர் சார்லி மிகச்சிறந்த இலக்கிய வாசகர். பறவையியலில் நிபுணராக இருந்த ஏ.கருணாநிதி என்ற நகைச்சுவை நடிகரைப் பற்றி உங்களில் யாருக்காவது தெரியுமா?
தென்மேற்குப் பருவக்காற்று படத்தைப் பார்த்துவிட்டு இந்தப் படத்திற்கு கட்டாயம் தேசிய விருது கொடுக்கப்பட்டே ஆகவேண்டும் என்று பேசினேன். எனது வாய் முகூர்த்தம் பலித்துவிட்டது" என்று வாழ்த்திப் பேசினார் விவேக்.
 |