|
மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா |
|
|
|
|
திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012 09:56 |
|

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்க இருக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார். அஜீத், நயன்தாரா இருவரும் ஏற்கெனவே "பில்லா" படத்தில் இணைந்து நடித்திருக்கும் வெற்றி ஜோடிகள்.
இந்தப் படத்தில் ஆர்யாவும் நடிக்க இருக்கிறார். ஆர்யாவுடனும் நயன்தாரா ஜோடியாக "பாஸ் என்கிற பாஸ்கரன்" படத்தில் நடித்திருக்கிறார். அப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
விஷ்ணுவர்தன் படத்தில் நயன்தாரா நடிப்பது உறுதியாக தெரிந்தாலும் அவர் ஜோடியாக நடிப்பது அஜீத்துக்கா, ஆர்யாவுக்கா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது ஆக்ஷன் படமில்லை. ஒருவேளை முக்கோண காதல்கதையாக இருக்கக்கூடும்...
 |
|
வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012 15:16 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |