| சும்மா விடமாட்டேன் -லின்ட்சே லோஹன் |
| வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011 14:51 |
|
"அவர்கள்தான் என்மீது வழக்குப் போடுவார்களா என்ன? நானும் அவர்கள்மீது வழக்குப்போட்டு அலைய வைப்பேன்" என்று கொதிப்போடு கொந்தளிக்கும் லி.லோ வழக்கறிஞர்களுடன் சேர்ந்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். எதற்காக இந்த திடீர் ரியாக்ஷன்? நகைக்கடையில் லி.லோ நெக்லஸைத் திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சியை விற்று லாபம் பார்த்துவிட்டது கமோபி அன்ட் கம்பெனி. கால்ஷீட் வாங்காமல் ஷீட்டிங் நடத்தினால் சும்மா இருப்பாரா லின்ட்சே லோஹன்? |
நகைக்கடையில் நெக்லஸைத் திருடியதாக லின்ட்சே லோஹன்மீது வழக்குப்போட்டு அசிங்கப்படுத்தியது கமோபி அன்ட் கம்பெனி. லி.லோ அதற்குக் கவலைப்பட்டதாகக்கூட தெரியவில்லை. ஆனால் இப்போது "அவர்களை சும்மா விட மாட்டேன்" என்று பொறிபறக்க அனல்காற்றை அள்ளி வீசுகிறார்.









