|
வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011 15:14 |
|
முல்லைப் பெரியாறு பிரச்சனையைப் பற்றி தமிழ், மலையாள நடிகர்களிடம் பத்திரிகைகளும் தொலைக்காட்சி சேனல்களும் கேள்வி கேட்க ஆரம்பித்தன. ஆனால் தமிழ்நாட்டு நடிகர், நடிகைகள் யாரும் எந்தப் பதிலையும் சொல்லாமல் தவிர்த்துவருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் மார்க்கெட் என்பது கேரளத்தையும் சேர்த்ததுதான் என்பதால் அநாவசியமாக எதையாவது சொல்லி அது சர்ச்சையாகி மார்க்கெட்டுக்குக் குழிபறித்துவிடும் என்று எச்சரிக்கையாகி இருக்கிறது தமிழ் சினிமாவின் தயாரிப்பு வட்டாரம். நடிகர் சங்கத்தின் மூலமாக ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். எனவே நடிகர்கள் வாய்திறக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.
 |