|
வணக்கம்!
தொழிலதிபர். ஓவர் நைட்டில் வந்து ஒட்டிக்கொள்ளும் கெளரவம் அல்ல இது. இதன் பின்னால் ஓடாய் தேயவைத்த உழைப்பும், இமைக்கு வெளியிலேயே தூக்கத்தை நிறுத்திவைத்த பல இரவுகளும், வெற்றிக்கு உரமாக அமைந்த தோல்வியென்னும் ரணம். என பல பல அனுபவங்களும் படிப்படியான முன்னேற்றமும் இருக்கும்.
சினிமா தொழிலும் அப்படிதான். சில வருடங்களாகவே சினிமா தொழில் நலிவடைந்துவிட்டதாக கருத்து நிலவி வந்தாலும் முன்பைவிட அதிகமான தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு வந்துகொண்டிருப்பதும் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கிறது. என்னதான் திருட்டு வி.சி.டி வந்தாலும் நல்ல படங்கள் எடுத்து வெளியிட்டால் நிச்சயம் லாபம் பார்க்கலாம். இதற்கு முக்கியமான தேவை திட்டமிடல். அதற்கு உறுதுணையாக தமிழ் சினிமா வர்த்தகம் பற்றி அவ்வப்போது செய்திகளை தரப்போகிறோம். தவிர ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கூட்டு சேர்ந்து படம் தயாரிக்க நினைப்பவர்களுக்கு இப்பகுதியில் பாலம் போட்டு தரப்போகிறோம். உதாரணத்திற்கு நல்ல சினிமா எடுக்க வேண்டும் என்று நினைப்பார் ஒருவர். ஆனால் கையில் இருப்பது ஒரு கோடி ரூபாய் மட்டுமே. இதுபோல் இன்னொரு நபருக்கும் அந்த ஆசை இருக்கும். அவருடைய பட்ஜெட்டும் ஒரு கோடி ரூபாயாகதான் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த இருவரும் இணைந்து தாங்கள் ஆசைப்பட்ட சினிமாவை எடுக்கலாமே? அப்படியான எண்ணமிருப்பின் சினிமா வர்த்தகம் பகுதியில் உள்ள பாலம் பகுதியில் தங்களுடைய விருப்பம் மற்றும் விபரங்களை பதிவு செய்துகொண்டு தங்கள் எண்ணத்திற்கும் கருத்திற்கும் உடன்பட்டவர்களுடன் கைகோர்த்துக்கொள்ளலாம்.
அதேபோல சினிமா சம்பந்தப்பட்ட உபகரணங்கள் தயாரிப்பாளராகவோ அவற்றை வாடகைக்கு விடுபவராக நீங்கள் இருந்தால் உங்களை பற்றியும் உங்களது உபகரணங்கள் பற்றியும் பாலம் பகுதியில் நீங்கள் பதிவு செய்துகொள்ளலாம். தவிர சந்தை என்ற பகுதியில் படத்தின் வசூல் நிலவரம், புதிதாக வெளிவந்த படத்தின் வியாபாரம் ஆகிய தகவலும் இடம்பெறும். உங்கள் வணிகம் சம்பந்தபட்ட விபரம், கம்பெனி பெயர், யாரை தொடர்புகொள்வது, முகவரி, தொலைபேசி எண்கள்,மின்னஞ்சல் ஆகிய விபரங்களை பாலம் பகுதியில் தரவேண்டும் .
தமிழ், ஆங்கிலம் எந்த மொழியிலும் அதனை அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் தகவல்களை business@ozeeya.com என்ற எங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். நீங்கள் செய்துகொள்ளும் வணிகத்தில் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு ozeeya.com பொறுப்பு ஏற்காது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
பாலத்தில் இணைந்து பார்ட்டனரை தேர்ந்தெடுங்கள்!
வாழ்த்துகளுடன்,
பொறுப்பாசிரியர்
பாலம் சந்தை |