|
தீபிகா படுகோன் நடத்திய மதுவிருந்து |
|
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2011 |
|
ராணா பட நாயகி தீபிகா படுகோன் மும்பை பிரபாவதி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். புதிய வீட்டில் குடிபுகுந்ததை முன்னிட்டு இந்தி திரைப்பட நட்சத்திரங்களுக்கு மதுவிருந்து ஒன்றை நடத்தினார்.
நள்ளிரவு தாண்டியும் மதுவிருந்து உற்சாகமாக நடந்தகொண்டிருக்க திடுதிப்பென்று உள்ளே நுழைந்தது காவல்துறை. அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் தங்கள் தூக்கம் கெடுவதாக புகார் கொடுத்ததுதான் காரணம்.
மதுவிருந்தில் அமிதாப் பாச்சன், பிரியங்கா சோப்ரா, ஜெனிலியா, இம்ரான் கான் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். தீபிகாவின் "ப்ரியத்திற்குரிய" சித்தார்த் மல்லையா தனது தந்தை விஜய் மல்லையாவுடன் இவ்விருந்தில் கலந்துகொண்டிருக்கிறார்.
மதுவுக்கே மதுவா? |